இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். அதிலும் தெலுங்கு படங்களில் அவர் அதிகளவில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் 2021 ஆம் ஆண்டு ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.
தமிழில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் சாய் தேஜும் நடித்துள்ளனர். தெலுங்கிற்காக பல மாற்றங்களை திரைக்கதையில் செய்துள்ளார் சமுத்திரக்கனி. பவன் கல்யாணின் முந்தைய படங்களின் பல ரெஃபரன்ஸ்கள் இந்த படத்தில் கமர்ஷியலாக பயன்படுத்தப்பட்டுள்ளன.