வாடிவாசல் படத்தை வெற்றிமாறனுக்கு முன்பே சூர்யாவை வைத்து இயக்க ஆசைப்பட்ட பிரபல இயக்குனர்…!

vinoth
திங்கள், 27 மே 2024 (11:20 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் வெற்றிமாறனுக்கு முன்பே வாடிவாசல் படத்தை இயக்குனர் லிங்குசாமி சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்று தனக்குத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் தானும் அந்த நாவலைப் படித்து அதை படமாக்கவேண்டும் என நினைத்ததாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்