ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

Raj Kumar

வியாழன், 23 மே 2024 (18:14 IST)
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். இவர் நடித்த சில தெலுங்கு படங்கள் தமிழ் டப்பிங்கிலும் வெளிவந்துள்ளன. தற்சமயம் இவர் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

 
வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் வாடிவாசல். எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை தழுவி இந்த படத்தை இயக்க இருக்கின்றனர். இந்த நிலையில் இதில் கதாநாயகர்கள் மாற போவதாக வெகு நாட்களாகவே பேச்சுக்கள் இருந்து வந்தன.
 
இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் ராம்சரணை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறியதாகவும் ஆனால் ராம்சரண் இன்னமும் அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. மேலும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ராம்சரண் வெகுவாக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.


 
ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு இருக்கும். எனவே அடுத்து தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு ராம்சரண் திட்டமிடுகிறாரோ என சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
 
இதே போல ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடித்து தமிழில் வெளியான ஸ்பைடர் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் மூலம் மகேஷ் பாபுவிற்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்