அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

vinoth

சனி, 25 மே 2024 (09:54 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.  ஆனால் கங்குவா திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான தங்கலான் படம் முதலில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிறுத்தை சிவா அடுத்து இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்த போது அஜித் சொன்ன சம்பளம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒத்துவரவில்லையாம். அதுபோல சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொன்ன சில நிபந்தனைகளும் அஜித்துக்கு ஒத்துவரவில்லையாம். அதனால் இந்த படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒதுங்கிவிடும் என சொல்லப்பட்டது.

இதற்கிடையில் இந்த படமே தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் கங்குவா படத்தை முடித்து விட்டு சிவா அடுத்து ஒரு பாலிவுட் படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்