சூர்யாவின் புறநானூறு திரைப்படம் இவரின் வாழ்க்கையைத் தழுவிதான் உருவாகிறதா?

vinoth

சனி, 25 மே 2024 (09:36 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில்  மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருந்தது .இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” என அறிவித்தனர். இதனால் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன. படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ராஜேந்திரன் என்பவரின் வாழ்க்கையைத் தழுவிதான் இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் அரசியல் கதைக்களம் காரணமாகதான் சூர்யா இந்த கதையில் நடிக்க தயங்குவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்