பண்டிகை தேதியை குறிவைத்த சூர்யாவின் கங்குவா திரைப்படம்!

vinoth

திங்கள், 20 மே 2024 (07:40 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தை 10 மொழிகளுக்கு மேல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தற்போது சொல்லப்படுகிறது. அதே தேதியில் அஜித்தின் விடாமுயற்சி படமும் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்