லியோ படம் LCU என போட்டுடைத்த உதயநிதி!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (09:23 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் பார்த்துள்ள அவர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் லியோ படம் சம்மந்தமான ட்வீட்டில் #LCU என குறிப்பிட்டு இந்த படம் LUC வில் இணைந்துள்ளதை போட்டுடைத்துள்ளார். இதைப் படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் உடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்