கூலி படத்தில் அமீர்கான் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

vinoth

வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகிறது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  அதே போல ஒரு கௌரவ தோற்றத்தில் அமீர்கான் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அதை படக்குழு உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் படத்தில் நடித்து வரும் உபேந்திரா அதை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “கூலி படத்தில் ரஜினி, நாகார்ஜுனா மற்றும் அமீர் கான் ஆகியோரோடு திரையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்