எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராக அறியப்பட்ட துரை செந்தில்குமார் , சூரியை வைத்து இயக்கிய கருடன் திரைப்படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் அடுத்து துரை செந்தில் குமார் அடுத்து விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கான கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் லாரன்ஸ் நடிப்பில் அதிகாரம் என்ற தலைப்பில் உருவாக இருந்த கதையைதான் தற்போது மாற்றங்கள் செய்து உருவாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.