லியோ படத்துக்கு ஏஜிஎஸ் திரையரங்கில் முன்பதிவு எப்போது? அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி!

புதன், 18 அக்டோபர் 2023 (07:44 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

படம் நாளை ரிலீசாகவுள்ள நிலையில் சில திரையரங்குகளில் நேற்று வரை முன்பதிவு தொடங்கப்படவில்லை. அதில் விஜய்யின் அடுத்த  படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளும் அடக்கம். விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பங்குத்தொகை பிரிப்பது சம்மந்தமாக எழுந்த கருத்து மோதலே இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒப்பந்தம் ஆகிவிட்டதாகவும், இன்று காலை முதல் ஏஜிஎஸ் திரையரங்குகளில் லியோ முன்பதிவு தொடங்கும் எனவும் ஏஜிஎஸ் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்