லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஆர் யு ஓகே பேபி’ லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (08:50 IST)
சினிமாவில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஜி தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் இயக்குனர் ஆகி நான்கு படங்களை இயக்கினார்.

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய நான்கு படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், முருகா அசோக், பாவல் நவநீதன், ரோபோ ஷங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  இந்த படம் பற்றி பேசியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் “இது சொல்லப்பட வேண்டிய கதை. நான் டாக் ஷோவில் பெற்ற அனுபவங்களை வைத்து இந்த கதையை இயக்கியுள்ளேன். இந்த படத்தில் ஒரு பாடல்தான். படத்துக்காக இளையராஜா நடத்திய மேஜிக்கை நேரில் பார்த்து உணர்ந்தேன். அவர் தன்னுடைய இசை மூலமாக இந்த படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த படம் குழந்தையைப் பற்றியது என்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்