சூரியால் தள்ளிப்போகும் சூர்யாவின் மெகா படம்!

செவ்வாய், 13 ஜூன் 2023 (18:55 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா.  இவர் நடிப்பில், சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் படம் கங்குவா.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவன் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் யோகி பாபு, திஷா பத்தானி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் வெற்றிமாறன் – சூரி- விஜய்சேதுபதி காம்போவில் வெளியான விடுதலை பாகம் 1 படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால், விடுதலை படம் வெளியான பின் வாடிவாசல் படம் வேலைகள் நடக்கும் நடக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது விடுதலை பாகம் 2 பட வேலைகளில் வெற்றிமாறன் இயங்கியுள்ளதால், வாடிவாசல் தள்ளிப்போகும் என தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்