குஷ்பு....பாரும்மா உன் புருஷர் பண்ற வேலைய - "இருட்டு" வீடியோ பாடல்!

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (11:50 IST)
துரை இயக்கத்தில் சுந்தர் சி. ஹீரோவாக நடித்துள்ள திகில் திரைப்படம் "இருட்டு". இந்த படம் டிசம்பர் 6ம் தேதி நாளை ரிலீஸாக உள்ளது. இப்படத்தில்  சுந்தர் சிக்கு ஜோடியாக புதுமுக நடிகை சாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. 
இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து படத்தின் மீதான கவனத்தை மக்கள் மத்தியில் அதிகரித்தது. காரணம் இதில் சுந்த சி. போலீஸ் அதிகாரியாக லிப் டூ லிப் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தது தான். அவருடன் தன்ஷிகா, சாக்சி , வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் இடம்பெறும் ஓ வரியா என்ற வீடியோ பாடல் வெளியானது.  இதில் சுந்தர் சி ஓர் ரொமான்டிக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.  ஸ்யன், அஞ்சனா மற்றும் ஷில்பா பாடிய இந்த பாடல் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்