எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கலர்ஃபுல் மேக்கிங் வீடியோ!

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (11:20 IST)
காதல் காவியங்களை தத்ரூபமாக இயக்கி ஆடியன்ஸை வியக்க வைக்கும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" பல வருடங்களுக்கு பின்னர் மிகுந்த எதிர்ப்பார்பிற்கிடையில் கடந்த வாரம் வெளியானது. 
 
தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்படத்தில் இவர்களது காதல் கெமிஸ்ட்ரி அவ்வளவு அற்புதமாக இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து ஓரளவிற்கு கலெக்ஷனில் கல்லா கட்டியது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. திரைக்கு பின்னால் படக்குழுவினரின் குறும்புகளை வெளிக்காட்டும் விதத்தில் இந்த வீடியோ வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்