உத்தர பிரதேசத்தில் முன்னாள் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றியவரின் மகன் ஜெய்பிரகாஷ் மவுரியா. இவர் தனது சகோதரி வாழும் ஊரான ஹலியா கிராமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கே 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார். ஒருநாள் சிறுமிக்கு போன் செய்து கிராமத்திற்கு வெளியே இருக்கும் சாலைக்கு வர சொல்லியிருக்கிறார் ஜெய்பிரகாஷ்.
செல்லும் வழியில் சுங்க சாவடியில் சோதனையின்போது சிறுமி கதறி அழுததை கேட்டு உஷாரான சுங்க சாவடி அதிகாரிகள் காரை மறித்து சிறுமியை மீட்டுள்ளனர். காரில் சிறுமியை கடத்திய ஜெய்பிரகாஷ், காவலர் மகேந்திர குமார் மற்றும் அவரது நண்பர்கள் மேல் ஆள்கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதுபோன்ற பாலியல் குற்றங்களிலிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டிய காவலரே இந்த செயலை செய்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் இந்த குற்றங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.