வடமாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டிற்குள் வெங்காயத்திற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் தற்போது 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மக்களவையில் வெங்காய விலை உயர்வு, தட்டுப்பாடு குறித்து எம்பிக்களின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் வெங்காய தட்டுப்பாடு இல்லை. டிசம்பர் 2 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 5,70,373 மெட்ரிக் டன்கள் வெங்காயம் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
நிர்மலாவின் இந்த பேச்சை கேட்டு காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, நீங்களும் வெங்காயம் சாப்பிடுகிறவர்தானே என ஆவேசமாக கேட்க அதற்கு நிர்மலாவோ வெங்காயமும் பூண்டும் கலக்காத உணவை உண்ணும் பரம்பரை தமது என பதில் அளித்தார்.