எனக்கும் பாலியல் ரீதியான அழைப்பு வந்தது.. பிரபல நடிகை ஓபன் டாக்!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (08:26 IST)
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார்.

தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது பற்றி அவர் பேசியுள்ளார். அதில் “எனக்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகள் இல்லாத போது, சிலரிடம் வாய்ப்புகளைக் கேட்டேன். அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு தயாராக இருந்தால் வாய்ப்புகளை பெறலாம் எனக் கூறினார்கள். அப்போது எனக்கு அதுபற்றி எதுவும் புரியவில்லை. பின்னர்தான் பாலியல் ரீதியான அழைப்பு என தெரிந்துகொண்டேன். அதன் பிறகு நான் இதுபோன்ற அனுபவங்களை கடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்