வித்தியாசமான உடையில் அமலா பாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:05 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அவர் நடித்த கடாவர் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி சிறிய அளவில் கவனம் பெற்றது.

சமீபகாலமாக அவர், ஆன்மிகத்தில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி புனித ஸ்தலங்களுக்கு சென்று அது சம்மந்தமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான ஆடை மற்றும் மூக்குத்தி அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்