இயக்குநர் எச். வினோத், தற்போது விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், அதன் தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று வெளியான படத்தின் க்ளிப்ஸ் வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், எச். வினோத் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உற்சாகத்தில் அவர் அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு எச். வினோத் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும், இருவரும் அடுத்து ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ஜனநாயகன்' படத்தின் வெளியீட்டிற்கு பின்னர், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எச். வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த ஒரு திரைப்படம் தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டிருப்பதால், தற்போது ரஜினி படத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.