அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

Siva

திங்கள், 23 ஜூன் 2025 (18:15 IST)
கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'தக்லைஃப்' திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்த நிலையில், அவர் ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கமல்ஹாசன் தற்போது அமெரிக்கா சென்று இருப்பதாகவும், அவர் ஜூலை மாதம் தான் திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், பாராளுமன்றக் கூட்டம் தொடங்குவதால், அவர் ராஜ்யசபா எம்.பி. பதவியேற்றுவிட்டு, கூட்டத் தொடர் முழுவதும் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.
 
ஆகவே, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் அன்பறிவ் படத்தின் படப்பிடிப்பு இருக்காது என்றும், அனேகமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அன்பறிவ் தனது திரைக்கதையை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து வருவதாகவும், சில முன்னணி இயக்குநர்களிடம் தான் எழுதிய திரைக்கதையை காண்பித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்