'விஜய்68' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்?

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (18:22 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும்  செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 

இப்படத்தை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  மாநாடு படத்திற்கு பின்னர்  வெங்கட்பிரபுவின் இப்படம் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகை ஜோதிகா குஷி, திருமலை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும்  விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின்  திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில், கத்தி, பிகில் ஆகிய  படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்