நடிகர் விஷாலின் புதிய காதலி...திருமணம் எப்போது?

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (20:07 IST)
தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஷால். இவர்,ஏராளாமான படங்களில் நடித்துள்ளார், தற்போது லத்தி என்ற படத்தின் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆக்ஸ்டில் ரிலீஸாகவுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் அனித ரெட்டி என்ற பெண்ணுடன்  விஷாலுக்கு திருமண நிச்சயமான நிலையில் திடீரென்று நின்றது.

இந்த நிலையில்,சமீபத்தில் பேட்டியளித்த விஷால், தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், விரைவில் அவரை தெரியப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல் விரைவில் அவரது திருமணம் குறித்து தகவல் தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

லத்தி பட ஷூட்டிங்கின்போது, காயம் அடைந்த விஷால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்