நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பில் விபத்து...

செவ்வாய், 20 ஜூலை 2021 (23:17 IST)
பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’.

இப்படத்தில் விநடிகர்  ஷாலுடன் இணைந்து மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது.

இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளின்போது, நடிகர் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் விஷாலுக்கு பிஸியோதெரபிஸ்ட் வர்மா சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷால் விரையில் குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்