நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பாக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த புஷ்பா 2. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது. இந்திய அளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தப் படமாக அமைந்தது.
புஷ்பா 2 உருவாக்கத்தின் போதே அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த படத்தில் 40 சதவீதக் காட்சிகளைத் தான் இயக்கவில்லை என சுகுமார் அறிவித்தார். அவருடைய இணை இயக்குனர்தான் இயக்கினார் என அறிவித்தார். அடுத்து சுகுமார் ஷாருக் கானை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.