கலைஞர் பயோபிக்கில் அவர் வேடத்தில் நடிக்க வேண்டும்… ஆசையை வெளிப்படுத்திய பிரபல நடிகர்!

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (08:00 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக பலவகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரைப் பற்றிய புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா “கலைஞரின் வாழ்க்கை வரலாறு பயோபிக்காக எடுக்கப்பட்டால், அதில் அவர் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அவரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதை விட ஒரு தொடராக எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக இந்திய சினிமாவில் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பயோபிக்குகள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில் ஜெயலலிதாவின்  பயோபிக் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் படமாக்கப்பட்டது. சமீபத்தில் இளையராஜாவின் பயோபிக் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் கலைஞரின் பயோபிக்கையும் நாம் எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்