கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி ஏழை எளிய மாணவர்களுக்கு அறுசுவை உணவு!

J.Durai

செவ்வாய், 4 ஜூன் 2024 (13:31 IST)
கலைஞர்  நூற்றாண்டு நிறைவு விழாவை யொட்டி சென்னை  மயிலாப்பூரில் அமைந்துள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில செயலாளர் டாக்டர்.அ.சுபேர்கான் தலைமையில் மாணவர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுபேர்கான்.....
 
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது 
 
அது மட்டும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 
கல்வி தரத்தை  உயர்த்த அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் இதை செய்து வருகின்றனர் தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்
 
பாரத பிரதமர் மோடி அவருக்கு அவரே சிறப்பான முறையில் மார்க்கெட்டிங் செய்து வருகிறார் 
 
அது மட்டும் இன்றி எல்லா வேலையும் விட்டு விட்டு ஒரு பாரத பிரதமர் தியானம் செய்து கொண்டிருக்கிறது எந்த விதத்தில் ஏற்று கொள்ள கூடியது  என்று தெரியவில்லை நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு அதை விட்டு விட்டு மக்களை பற்றி கவலை படாமல் தியானம் செய்து கொண்டிருக்கிறார் இதற்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
 
இந் நிகழ்வில் கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சென்னை தென்மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெ.எஸ்.ஆர்.ஜெகன்ராஜ், மாவட்ட தலைவர் ஷேக் முகமது, துணை தலைவர் பாஷா, துணை அமைப்பாளர்கள் உத்திரியம்,ஜான்சன், அலெக்ஸ்,  சுலைமான், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட், துணை அமைப்பாளர் சித்திக் மற்றும் தஞ்சை ஹாஜி, தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கத் தலைவர் அஜீஸ் கண்ணன்,மாநில துணைச் செயலாளர்கள் அடையாறு ஷபீல், ஷாகுல் அமீது ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்