பாலிவுட்டில் எல்லோரும் 500 கோடி ரூபாய் வசூல் படத்தையே எடுக்க நினைக்கிறார்கள்- அனுராக் காஷ்யப் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2024 (07:58 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.

சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் விஜய்யின் லியோ படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் சமீபத்தைய போக்கு குறித்து பேசியுள்ள அவர் “இந்தி திரையுலகில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் 500 முதல் 800 கோடி ரூபாய் வரை வசூலையே குறிவைக்கிறார்கள். யாரும் நல்ல திரைப்படம் எடுக்க நினைப்பதில்லை. படங்களை ஊமையாக்கி, பிறகு கதைகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.ஒருபோதும் அசலான படைப்புகளை எடுக்காமல், மற்றவர்களின் படங்களை காப்பி அடித்தே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்