விஜய் 68 படத்தில் இணைந்த பிரபல ஹீரோ… 20 வருடங்களுக்குப் பிறகு ஒரே படத்தில்!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (08:35 IST)
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் ஷுட்டிங்கை இன்றோடு முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடக்கும் என சொல்லப்படுகிறது.

இதுவரை படத்தில் விஜய்யைத் தவிர மற்ற நடிகர் நடிகைகள் யாரும் ஒப்பந்தமானதாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்போது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்யோடு ஜெய், பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்