#jawan : அட்லீக்கு வாழ்த்துகள் கூறிய ரஜினி பட இயக்குநர்...

திங்கள், 10 ஜூலை 2023 (17:56 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர்  அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஜவான்.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில்  விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் தமிழில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்திற்கு சமீபத்தில் மத்திய சென்சார் போர்ட்டு  சான்றிதழ் வழங்கியது..

அதன்படி,  இப்படத்திற்லி யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், இப்படத்தின் டிரைலர் 2 நிமிடம் 15 நொடிகளுக்கு இருக்கும் என தகவல் வெளியானது.

மேலும், இப்படத்தில் தியேட்டர் வெளியீட்டு உரிமை  மட்டும் ரூ.250 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று, இயக்குநர் அட்லீ  தன் டுவிட்டர் பக்கத்தில், ''ஜவான் உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்'' என்று பதிவிட்டு,  இப்படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட்டிருந்தார். இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

எனவே, இந்தியில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள அட்லீக்கு, மாஸ்டர், லியோ பட தயாரிப்பாளர் ஜெகதீஸ், ஆர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,  பிரியா மோகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

மேலும் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘’சூப்பர்! மாசிவ் அறிமுகம் ‘’என்று பதிவிட்டு, அனிருத், சூப்பர் ஸ்டார்  ஷாருக்கான் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.

ஜவான் திரைப்பட டிரைலர் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Superbbb

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்