லியோ படத்துக்கு மலேசியாவில் இவ்வளவு டிமாண்ட்டா? இதுவரை இல்லாத தொகைக்கு விற்பனை!

செவ்வாய், 11 ஜூலை 2023 (07:28 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.

நேற்றோடு விஜய்யின் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து மீதமுள்ள காட்சிகளை இன்னும் சில நாட்களில் படமாக்கி முடித்து ரிலீஸ் வேலைகளை தொடங்க உள்ளது படக்குழு.

லியோ படத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ள நிலையில் மலேசியா விநியோக உரிமை இதுவரை எந்தவொரு தமிழ்ப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்