இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் சிங்கம்புலி படம் பற்றி பேசியுள்ளார். அதில் “ரெட்ரோ படத்தில் ஒரு நீண்டக் காட்சியை நான்கு நாட்கள் படமாக்கினோம். அந்த காட்சி சாத்தியமே இல்லாதது. ஆனால் அதை கார்த்திக் சுப்பராஜ் சாத்தியமாக்கியுள்ளார். அப்போது நான் ஓய்வாக இருந்த சூர்யாவிடம் பேசினேன். அவர் நமக்குள் ஏன் இவ்வளவு இடைவெளி வந்துவிட்டது எனக் கேட்டார். நாங்கள் மாயாவி பட அனுபவங்களை எல்லாம் பேசிக்கொண்டோம்” எனக் கூறியுள்ளார். சூர்யாவின் மாயாவி படத்தை இயக்கியது சிங்கம் புலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.