விஜய்யின் ''லியோ ''பட புதிய அப்டேட் ...இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவீட்

திங்கள், 10 ஜூலை 2023 (18:19 IST)
லியோ படத்தின் முக்கிய அப்டேட்   இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.

லோகேஷ் இயக்கி வரும்  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை  செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், விஜய் குரலில், அனிருத் இசையமைப்பில், லியோ பட முதல் சிங்கில்   ‘’நா ரெடிதான்’’ என்ற பாடல் வெளியானது. இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்பாடல் சர்ச்சையான நிலையிலும்  டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில்,  இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கடந்த வாரம்,லியோ படத்தின்  கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமைகளை கைப்பற்றிய  நிறுவனம் பற்றிய தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ''லியோவில்  நடிகர் விஜயின் காட்சிகள்  நிறைவடைந்தது ; மீண்டும் இரண்டாவது முறையாக பயணத்தை சிறப்பாக மாற்றியதற்கு நன்றி அண்ணா'' என்று பதிவிட்டுள்ளார்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

And it's a wrap for our @actorvijay portion!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்