உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

vinoth

புதன், 2 ஏப்ரல் 2025 (12:07 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. 

ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கு,  இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருவானார். ஆனாலும் முதல் படம் தந்த வெற்றியை அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. தற்போது தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறி குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் “தென்னிந்திய படம் ஒன்றில் நான் நடித்த போது அதன் இயக்குனர் என் அனுமதி இல்லாமல் கேரவனுக்குள் வந்தார். அப்போது நான் உடைமாற்றிக் கொண்டிருந்தேன். அதனால் நான் கத்தியதால், அவர் வெளியே சென்றார்” எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த இயக்குனரின் பெயரைக் கூற மறுத்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்