கடந்த ஆண்டு இவர், பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான விஜய் என்பவர் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பணமோசடி புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, விஜய் ஆன்லைன் மூலமாக அளித்த அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரவீந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.