விபத்திலிருந்து சிறுவனை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்... வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (19:49 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், சாலையில் சைக்கில் சென்றுகொண்டிருந்த சிறுவனை, ஒரு லாரி மோத வந்தது. அப்போது, அங்கு நின்றிருந்த டிராபிக் போலீஸ்காரர் துரிதமாகச் செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றினார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், உள்ள நான்குமுனை சந்திப்பு சாலையில் , நாள்தோறும் , ஏராளமான வாகனங்கள் செல்லும். அதனால் இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.
 
எனவே, இப்போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில்,ஒரு போக்குவரத்து காவலர் இந்த சாலையில் பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். 
 
இந்த நிலையில் ,கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக, அந்த நான்குமுனை சாலை வழியாக ஒரு சிறுவன் சைக்கில் சென்றுகொண்டிருந்தான். அப்போது ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த சிறுவன் பார்க்காமல், போலீஸ்காரரை மீறி செல்ல முயன்றான்.அப்போது போலீஸ்காரர் அந்த சிறுவனை தடுத்தி நிறுத்தியதால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

அதன்பின்னர், காவலர், அந்தச் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்