என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

Mahendran

புதன், 9 ஏப்ரல் 2025 (12:00 IST)
முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனுக்கு என்னால் தான் பதவி போச்சு என்று ரஜினிகாந்த் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஆர்.எம். வீரப்பன் தி கிங்மேக்கர்" என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.
 
இதில் ரஜினி பேசிய போது, "பாட்ஷா" திரைப்பட விழாவில், ஆர்.எம். வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டு வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியிருந்தேன். அமைச்சராக அவர் இருந்தபோது அவ்வாறு நான் பேசியிருக்க கூடாது. அன்றைய சூழலில் எனக்கு தெளிவில்லாமல் இருந்ததால் அவ்வாறு பேசிவிட்டேன்.
 
இதனை அடுத்து ஜெயலலிதா அவரை   பதவியில் இருந்து நீக்கிவிட்டார். "என்னால் இப்படி ஆகிவிட்டதே" என்று எனக்கு தூக்கமே வரவில்லை. அதனை அடுத்து மறுநாள் காலை நான் அவரிடம் சாரி சொன்னபோது, அதைப்பற்றி எல்லாம் அவருக்கு கவலையே படவில்லை.
 
மேலும், ஜெயலலிதாவிடம் நான் உங்களுக்காக பேசவா? என்று கேட்டபோது, “அதெல்லாம் வேண்டாம். ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால் அதை மாற்ற மாட்டார். நீங்கள் போய் பேசி உங்கள் மரியாதை இழக்க வேண்டாம்,” அப்படி  ஒரு பதவி எனக்கு தேவை இல்லை" என்று கூறினார்.
 
இதனை அடுத்து, அவர்தான் ரியல் கிங்மேக்கர் என்பதை அன்றே நான் தெரிந்து கொண்டேன் என்று ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்