வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

Mahendran

புதன், 9 ஏப்ரல் 2025 (11:12 IST)
வீடு, வாகனக் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
 
கடந்த பிப்ரவரி மாதம், ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது மேலும் 25 புள்ளிகள் குறைத்து 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
 
இந்த ரெப்போ அடிப்படை புள்ளிகள் குறைப்பு காரணமாக, வீடு மற்றும் வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
வீடு, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்பட, வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் மற்றும் தவணை தொகை குறைய வாய்ப்புள்ளது.
 
2025 ஆம் ஆண்டு முடிவதற்குள், இந்திய ரிசர்வ் வங்கி மேலும் மேலும் சில புள்ளிகளை குறைக்கும் என்றும், அனேகமாக இன்னும் ஒரு சில மாதங்களில் 5.5 சதவீதம் என குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக, வங்கியில் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுபோல், இன்னும் சில புள்ளிகளையும் அடுத்தடுத்து குறைக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்