உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு வரன் தேடி வந்த நிலையில், புரோக்கர் உதவியுடன் ஒரு வாலிபரை மாப்பிள்ளையாக முடிவு செய்து நிச்சயதார்த்தமும் செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமண நாள் நெருங்க நெருங்க, திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அடிக்கடி மாப்பிள்ளை அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்ததன் காரணமாக, மாமியாருக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே திடீரென காதல் ஏற்பட்டது.
மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்த நிலையில், மாமியாரும் மருமகனும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இது காதலாக மாறிய நிலையில், மணப்பெண்ணின் தாய் மருமகனுடன் திடீரென ஓடிப்போனார்.
மேலும், தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகளும் பணமும் எடுத்துக் கொண்டு அந்த பெண் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன இருவரின் செல்போன் சிக்னலை வைத்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.