சென்ற வாரம் லாரி உரிமையாளர் ஒருவர் விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக பொருட்களை ஏற்றி வந்ததால் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தியதும் லுங்கி அணிந்து ஆட்டோ ஓட்டியவருக்கு 2000 ரூ அபராதம் விதித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரு லாரி உரிமையாளர் 1,41,000 ரூபாய் அபராதம் செலுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனால் இந்த சட்டத்துக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இதனையடுத்து மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையை திணிப்பதாகும். மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே அமலில் உள்ள ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்படும்’ எனக் கூறியுள்ளார்.