மவுண்ட் ரோட்டில் வாகன நெருக்கடி – இருவழிப்பாதையாக மாற்றியதால் சிக்கல் !

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:46 IST)
இருவழிப்பாதையாக மாற்றப்பட்ட அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.

சென்னை அண்ணா சாலை, மெட்ரோ பணிகளுக்காக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. தற்போது மெட்ரொ பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜி.பி.சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்ட சோதனையாக அண்ணா சாலை ஒயிட்ஸ் சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அண்ணா சிலையிலிருந்து ஜெமினி மற்றும் தேனாம்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள் LIC வழியாக அண்ணா மேம்பாலத்திற்கு செல்லலாம். மேலும் வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இருவழிச்சாலையாக மாற்றியதால் வாகன நெருக்கடி அதிகமாகியுள்ளது. இதனால் எல்.ஐ.சி, அண்ணாசாலை, உட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு, பீட்டர்ஸ் ரோடு ஆகியப் பகுதிகளில் அதிகமான வாகன நெருக்கடி ஏற்படுகிறது. அந்த பகுதிகளில் அதிகமான திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளதால் உள்ளாதால் மாற்று ஏற்பாடுகள் செய்தாலொழிய வாகன நெருக்கடியைக் குறைப்பது கடினம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்