பரந்தூர் விமான நிலையத்திற்கு திருமாவளவன் எதிர்ப்பா? ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (12:34 IST)
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட இருப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விமானம் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து அந்த பகுதி மக்களை சந்தித்து கோரிக்கை கேட்டு அறியவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பரந்தூர் விமான நிலையம் பகுதியில் மக்களின் குடியிருப்புகளை அகற்றாமல் அவர்களை அப்புறப்படுத்தாமல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மற்றும் தரிசு நிலத்தில் மட்டும் விமான நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கேட்டுக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் விரைவில் அவர் ஆய்வு செய்ய இருப்பதாகவும் அந்த பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்