மத்திய மாநில அரசுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை செய்துவரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக சென்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
இரண்டாவது ஏர்போர்ட் இந்த இடத்தில் அமைவதற்கு திமுக தான் காரணம். அனைத்து விமானத்தையும் அரசு விற்று வருகிறது. அதானி துறைமுகத்தை கட்டுவது போல், ஏர்போர்ட்டைக் கூட கட்டலாம். இதை நேரடியாக அதானி கட்டினால் நாம் சண்டை போடுவோம், அதனால் அரசு கட்டி அவரிடம் கொடுக்கப் போகிறது.
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 37 குழு அமைத்துள்ளார், அடுத்து 38 வது குழு அமைப்பார் வேறு எதையும் செய்ய மாட்டார். சென்னை விமான நிலையம் சரி இல்லை என்று யாராவது குறை கூறினார்களா? ஏர்போர்ட் எங்கு வேண்டும் என்றாலும் கட்டலாம், ஆனால் எந்தக் கொம்பாதி கொம்பனும் விவசாய நிலங்களை உருவாக்க முடியாது. நான் இங்கு இருக்கும் விமான நிலையம் இங்கு அமையாது என கூறினார்.