9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

Mahendran

புதன், 16 ஜூலை 2025 (17:27 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 ஆம் வகுப்பு மாணவியை, அதே பள்ளியில் 9, 10, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் என்ற பகுதியில் 9 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் ஒரு பையனுடன் மெசேஜ் அனுப்பியுள்ளார். அப்போது அந்தப் பையன் "உங்கள் வீட்டிற்கு நான் வருகிறேன்" என்று கூற, அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் கதவை தட்டியுள்ளான்.
 
9 ஆம் வகுப்பு மாணவி கதவை திறந்தபோது, அந்த மாணவன் மட்டும் இன்றி, அவருடன் மேலும் 3 மாணவர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து, அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் தாய் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, பாலியல் பலாத்காரத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மகளை மட்டும் தன்னுடன் அழைத்து, வீட்டைப் பூட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
 
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, நான்கு மாணவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். சிறுமி படிக்கும் அதே பள்ளியில்தான் அந்த நான்கு மாணவர்களும் படிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ள நிலையில், கூடுதல் விசாரணை நடைபெறுவதாகவும், விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை குறித்த முடிவை எடுப்போம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்