மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்படலாம்: அமலாக்கத்துறை..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (14:24 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்ற வழக்கில் அமலாக்கத்துறை வாதிட்டது. 
 
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்க துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் காரசாரமான வாதம் செய்யப்பட்டது. 
 
மேல்முறையீட்டு மனுக்கள் பலனற்றதாகிவிட்டது என்றும் புதிய மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
 
ஆனால் வழக்கு மாதக்கணக்கில் விசாரிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய முடியாது என்றும் மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டது. 
 
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் செந்தில் பாலாஜியை எப்படி விடுவிக்க முடியும் என்று கேள்வி கேட்டனர்? மேலும் வழக்கை மூன்றாவது நீதிபதி விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்