சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டு பந்தல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் மாநாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. ராட்சச குழாய்கள், இரும்புத் தகடுகள், இருக்கைகள் போன்ற பொருட்கள் மாநாட்டு இடத்திற்கு இறக்கப்பட்டு வருகின்றன.
தினமும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த வாரம் முதல் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்த ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாட்டு மேடை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டு பந்தல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, விஜய்யின் மக்கள் செல்வாக்கை பறைசாற்றும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அறுசுவை உணவு, குடிநீர், கழிவறை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பார்க்கிங் வசதி உட்பட அனைத்து திட்டமிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாடு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.