செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!

செவ்வாய், 4 ஜூலை 2023 (07:39 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பண மோசடி பிரிவில் மூன்று வழக்குகள் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கு குறித்து விரைவில் போலீசார் அவரிடம் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்