தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சிலமணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (14:19 IST)
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் ஜூலை 6ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்