ஸ்டிக்கர் கலாச்சாரம் முடிந்தது என்று யாருப்பா சொன்னாங்க !

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (20:13 IST)
கரூரில் மீண்டும் தொடங்கியது ஸ்டிக்கர் கலாச்சாரம் ? ஸ்டிக்கர் ஒட்ட முழு ஒத்துழைப்பு கொடுத்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டரின் செயலால் பொது மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் சலசலப்பு.


கரூர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒராண்டு சாதனையை விளக்கும் புகைப்படக்கண்காட்சி துவங்கியது. மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இந்த புகைப்பட கண்காட்சியில்., ஏற்கனவே வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், இனி வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து புகைப்படங்களாக வெளியிடப்பட்டிருந்தது. மேலும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடன் இருந்த புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

மேலும், தமிழக அரசின் ஒராண்டு சாதனைகளை விளக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் விழாக்களின் தொகுப்புகளை, மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாக, அதிநவீன மிண்ணனு வாகனத்தில் ஒளிபரப்ப பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு கையேடும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி என்றாலே, ஸ்டிக்கர் கலாச்சாரம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போதைய எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியும் அதே ஸ்டிக்கர் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில், எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகளாக அதே ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், துவக்கி வைத்தார்.

அந்த ஸ்டிக்கரில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படமும், தற்போதைய தமிழக முதல்வரின் படமும் இடம்பெற்றிருந்தது, ஸ்டிக்கர் ஒட்டும் போது, அந்த ஸ்டிக்கரை கிழிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜ், ஸ்டிக்கரை பிரித்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே, ஸ்டிக்கர் கலாச்சாரத்தை துவக்கியது பெரும் வேதனையான சம்பவமாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்