தெலுங்கு மொழியை தங்கள் மீது திணிப்பதாக கண்டனம் தெரிவித்து தெலுங்கானாவில் தனியார் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அவரவர் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்த குரல்கள் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்தான் தெலுங்கானாவில் நடைபெற்ற தெலுங்கு திணிப்பு எதிர்ப்பு போராட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டாயம் தெலுங்கு மொழியை படிக்க வேண்டும் என சமீபத்தில் தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது. இதில் தெலுங்கானாவில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பள்ளிகளும் அடங்கும். ஆனால் அந்த பள்ளிகளில் முதல் மொழியாக ஆங்கிலத்தையும், இரண்டாம் மொழியாக இந்தியையும் அந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதனால் தெலுங்கையும் அவர்கள் படிக்க வேண்டும் என்பது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக கூறி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானாவின் தாய்மொழியான தெலுங்கை படிக்க மாட்டேன் என அம்மாநில மாணவர்களே போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K