கரூர் மாவட்டத்தில், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், நடிகரும், அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேட்டூரிலிரிந்து மயிலாடுதுறை வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கரூரை அடுத்த நொய்யல் குறுக்கு சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியபோது,
காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்திய அரசு ஏன் காலதாமதப்படுத்துகிறது என தெரியவில்லை. மோடி வெளிநாடு பயணங்களில் பிஸியாக இருப்பதால் காவிரி பிரச்சனையை கண்டுகொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பிய சரத்குமார், காவிரி பிரச்னை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். காவிரி மேலாண்மை அமைக்க அழுத்தம் கொடுக்க இதுவே சரியான தருணம் என்றார்.
மக்களவை உறுப்பினர்கள் ராஜினமா செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இது தவிர வேறு வழியில்லை. மத்திய அரசின் செயல்பாடுகள் இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்ற அவர், காவிரி மேலாண்மை பாரியம் அமைக்கும் விவகாரத்தில் 9-பேர் கொண்ட குழு அமைத்திருக்கும் மத்திய அரசின் செயல் காலதாமதபடுத்தும் நோக்கமேயாகும்.